பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கட்டி இன்புடன் வாழும் பறவைகட்கு இன்னல் செய்தவனாய் ஆவையே! இரக்க உணர்ச்சி உனக்குத் தோன்றவில்லையானால், வேறு யாரிடத்தில் தோன்றப்போகிறது? என்னும் பொருளில்,

“நடனாம் வணங்கும் தொல் லோன் எல்லை நான்முகன் மால்
                                                                   அறியா
கடனாம் உருவத் தரன் தில்லை மல்லல்கண் ஆர்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும் முட்டையும்
                                                                  கட்டழித்து

மடனாம் புனை தரின் யார்கண் ணதோமன்ன இன்னருளே“”

என்று கூறி மடல் விலக்கினாள்.

தலைமகளின் கண்களைப் புனைய வருகின்றார் புலவர் பெருமானார். அவற்றின் அகற்சி, நீளம், ஒளி, நிறம், ஆகியவற்றிற்கு உவமைகளாக அவர் கூறியவை பின்வருவன. அவற்றின் அதற்சிக்கு, ஈசன் இடத்து வைத்த அன்பின் அகலம் உவமையாயிற்று. அவற்றின் கருமைக்குப் பாசத்தின் நிறம் பொருளாயிற்று. ஒளிக்குத் தில்லை ஒளி உதாரணமாயிற்று. அவற்றின் வெண்மைக்குத் திருநீறு எடுத்துக்காட் பாயிற்று. நீட்சிக்கு, அன்பர் இறைவன் திருவடி களைப் புகழும் புகழ்உரைகள் உவமையாக நின்றன.

“ஈசற்கி யான்வைத்த அற்பின கன்றவன் வாங்கியஎன்
பாசத்திற் கார்என் றவன் தில்லை இன்ஒளி போன்றவன்
                                                              தோள்
பூசத் திருநீ றெனவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம்

பேசத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே”

என்பது மேலே கூறிய கருத்தை உணர்த்தும் பாடல்.

சில்லோர், தமிழில் குறைகாண முற்படுவது இக்கால நாகரிகமாக இன்னமும் இருந்து வருகிறது. அவர் கூறும் குறைகளில் தமிழ் இலக்கியங்களில் (humor) நகைச்சுவை இல்லை என்பது. இலக்கண