பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


மாகப் புலவர்கள் பேகனைக் கண்டு அறிவு புகட்டத் தொடங்கினர்.

ஒரு முறை கபிலர் பேகனைக் காண இவன் வாழ்ந்த மலைப்பாங்கர் சென்றனர். அவர் சென்றதற்குக் காரணம்; அவர் சுற்றம் பசியால் வாட்டமுற்றதனால் அதனைத் தீர்த்தற்கு ஆகும். பேகனைக் காணின், பசிநீங்கும் என்பது அவர் கருத்து. சென்றவர் முரசுபோல ஓசை செய்து கொண்டு அருவி சொரிதலையும், அவண் ஓங்கிய மலையின் உயர்ச்சியையும் கண்டு, பேகன் மனையிடத்தின் வாயிலண்டைப் போந்து மலையினை வாழ்த்தி நின்றார், பேகன் ஆண்டு இலன். அவன் கண்ணகியைப் பிரிந்து வேற்று மங்கையுடன் வாழ்ந்து வந்தனன் என்பது முன்பே குறிப்பிடப்பட்டதன்றோ?

கபிலர் பேகன் பெயரைச் சுட்டிப் பாடியதைக் கேட்ட கண்ணகி, தன்கணவன் பேரைக் காதால் கேட்ட உணர்ச்சி வயத்தளாய் வாயிலின், வெளியே வந்தனள். அழுகையும் மிக்கது. அவ்வழுகையும் இனிமை தரத்தக்கதாகவே குழல்போல இருந்தது. இந்நிகழ்ச்சியைக் கண்ட கபிலர், இரக்கம் மிகக் கொண்டவராய், அங்கு இருக்கவும் மனம் அற்றவராய்ப் பேகன் ஆண்டு இல்லாமையை உணர்ந்து அவன் உறையும் உறைவிடம் நேரேசென்றார். பேகனைக்கண்டார். கண்டு "மழைபெய்ய வேண்டி முகிற்குழாங்கள் மலைமீது தவழ்வதாக என்று தெய்வம் பராவி, அங்ஙனமே தாம் வழிபட்ட தன் பலனாக மழை வளந் தரவும், மீண்டும் அம்மேகம் பெய்தது சாலும், மேலேசெல்வதாக, என்று கடவுளைப் போற்றும் இயல்புடைய குறமளிர் குலவி மழையின் பயனால் தினைப்புனம் செழிக்க அத்தினையரிசியுண்டு வாழ்கின்ற மலைநாட்டு மன்ன!" எனவும், “சினத்தினால் செய்யும், போரையும், கைவன்பையால்கொடுக்கும் கொடையினையும் உடையோனே!"