நெடுந்தேர் பூண்க." என்பது இப்புலவர் வாய் மொழிக் கருத்துக்கள்.
பெருங்குன்றூர்க்க்கிழாரும் பரணர் கருத்தையும் அடியொற்றிப் பாடினார். பெரும் புலவர்களின் கருத்துக்கள் யாவும் ஒரு படித்தாகவே காணப்படும்.
பெருங்குன்றூர்க் கிழாரும் பேகனைக் கண்டு "ஆவியர் கோவே! யான் நின் மாட்டு வேண்டுவது பொருள் பரிசிலே அன்று. நீ நேரே இவண் நின்று நீங்கிக் கண்ணகி வாழும் அவண் சென்று அவட்கு மலர் சூட்டி மகிழ்க. அதுவே யான் வேண்டும் பரிசு. அவள் கூந்தல் தோகை போல் அடர்ந்து மென்மையாகக் காணப்படுவது. அவ்வழகிய குழல் பூசுவன பூசிப் பூண்பன பூண்டு பன்னாள் ஆயது. அதனல் அது பொலிவிழந்து காணப்படுகிறது. அது மீண்டும் பொலிவு பெற நீ அருள் செய்க" என்று வேண்டி நின்றார்.
இங்ஙனம் புலவர்கள் யாவரும் ஒரு மனப்பட்டுப் பேகனை அணுகித் தாம் பரிசில் பெறுதலேயும் அறவே மறந்து இவன் எவ்வாறேனும் கண்ணகி என்னும் கற்பரசியாளுடன் இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது கடத்தப் பெரிதும் பாடுபட்டனர். இவர்கள் பாடு பாழாய் இருக்குமோ? இராது. பேகன் கண்ணகியிடம் சென்றிருப்பான். அவளுடன் இல்லறத்தை ஏற்று இனிது வாழ்ந்திருப்பான்.
"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"
என்பது பொய்க்குமோ? என்றும் பொய்க்காது.