பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. வள்ளுவரும் கடவுள் வாழ்த்தும்

திருவள்ளுவர் எம்மொழியினராலும் எம்மதத்தினராலும் எவ்வினத்தவராலும் போற்றப்பட்டு வரும் பெரும்புலவர் என்பது உலகு அறிந்த ஓர் உண்மையாகும். இங்ஙனம் இவர் மதிக்கப்படுதற்குரிய காரணம், இவரது வாக்குக்களாகிய திருக்குறட் பாக்கள் அத்துணைப் பொருட்செறிவுடையன என்பது தவிர்த்து, வேறு எதுவும் இன்று. இவர் யாத்த இப்பெரு நூலில் இல்லாதது ஒன்றும் இல்லை. இஃது எல்லாம் நிறைந்த ஓர் அறநூல். இதனால் தான் நத்தத்தனார் என்னும் புலவர்,

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்தன்பின்—போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளதோ?

என்று விதந்து பாடினர்.

“அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே” என்பது ஒரு நூலால் எய்தும் பயனைக் குறிக்கும் விதியாகும். இவ்விதி முற்றிலும் பொருந்தப்பெற்றது நந்தம் வள்ளுவனார் வாய்மொழியாகிய திருக்குறள் என்றறிக. இதனை நன்கு உணர்ந்த கொடிஞாழல் மாணிபூதனார் என்னும் புலவர்,

அறன் அறிந்தேம் ஆன்ற பொருள் அறிந்தேம் இன்பின்
திறன் அறிந்தேம் வீடு தெளிந்தேம்—

என்று உண்மை அறிந்து உரைத்துள்ளார். இன்னோரன்ன சீரிய பண்புடைய நூலின்கண் கடவுளைப் பற்றிய குறிப்புக்கள் எந்த அளவுக்குக் காணப்படுகின்றன என்பதை எடுத்துக் கூறப்படுவதே இக்-