பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசியுள்ளார். அங்ஙனமே கம்பரும் தம்நூலுக்கு இராமாவதாரம் என்றபெயர் சூட்டியதோடு அமையாது 'தோமறு மாக்கதை' என்றும் குறிப்பிட்டிருப்பதை உணர்வோமாக. இவ்விருபுலவர்களும் தாம்தாம்பாடும் நூற்களை ஆசையுடன் பாடத் தொடங்குவதாகக் கூறுகின்றனர். முன்னர்க் கூறியவர் சேக்கிழார். "அளவில் ஆசை துறப்ப அறைகுவேன்" என்பது அவர் வாக்கு. பின்ன வரான கம்பர் ' ஆசைபற்றி அறையலுற்றேன்" எனப் பாடி மகிழ்கின்றார்.

தொண்டர் சீர்பரவுவார் தம் ஆசையின் பெருக்கத்தினையும் ஆர்வத்தின் விழைவினையும் ஒர் உவமையில் வைத்துப்பேசுகையில் பெருகு தண்கடல் உற்றுண் பெருங்சை ஒருகணங்கனை ஒக்கும் தகைமையேன் என மனமுவந்து பகர்ந்துள்ளார். இம்முறையில் தாமும் அமைய வேண்டும் என்று எண்ணிய கம்பநாடரும், "ஒசைபெற்றுயர் பாற்கடல் உற்றொருர பூசை முற்றவும் நக்குபு புக்கென" என இசைத்துள்ளார். முன்னவர் கூறியதில் நாய் உவமையாக வந்துளது. பின்னவர் பாடியதில் பூனை எடுத்துக்காட்டாக இயம்பப்பட்டுள்ளது.

சேக்கிழார் காவிரியாற்றைப்புகழ்ந்து உவமை தருகையில் செவிலித்தாயைக் குறிப்பிட்டுள்ளார். இதனைச் 'செய்யபூமகட்கு நல் செவிலி போன்றது’ என்னும் அடிகளில் காணலாம். இங்ஙனமே கம்பரும் சரயுநதிக்கு உவமை பேசுகையில் 'சரயு என்பது தாய்முலை அன்னது' என்றனர். செவிலி என்பாள் வளர்த்ததாய். தாய் என்பாள் பெற்றதாய். இவ்விருதாயரும் தாய்ம்மைப்பண்பில் ஒன்றுபட்ட மனப்பான்மையுடையவர். ஆகவே, நதிக்கு இவ்விரு உவமைகளும் பொருத்தமானவைகளே.

சேக்கிழார்பெருமானர் சோழமன்னனது அரசியல் மேம்பாட்டைப் புகழ்ந்து கொண்டு வருகையில்