60
அணைவன என மிடையும் அவ்வனமே' எனக் கூறினார். கரியின் நிறத்திற்கு இரவு உவமையும், அரியின் நிறத்திற்குப்பகல் உவமையும் ஆக நின்றன. இந்த உவமையினை ஏற்ற இடத்தில் அமைக்க எண்ணிய கம்பர், யுத்தகாண்டத்தில் விபீணடனும் சுக்ரீவனும் ஒருவரை ஒருவர் தழுவி நின்ற நிலைமைக்கு உவமைகாட்டி மகிழ்வுற்றார். "இருவரும் ஒருநாள் உற்ற, எல்லியும் பகலும் போலத் தழுவினர் எழுவின் தோளார்" என்பது கம்பரது பாடல். சுக்ரீவனுக்குப் பகலும், வீபீடணனுக்கு இரவும் உவமைகள் ஆயின, விபீடணன் கரியன்; சுக்ரீவன் செம்மையின்; ஆகவே, உவமைகள் இவ்விருவர்க்கும் உகந்தவைகளாகவே அமைந்தன. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் புராணத்துள்,
"கேட்டவப் பொழுதே சிந்தை கிளர்ந்தெழு மகிழ்ச்சிபொங்க
நாட்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா"
என்னும் இவ்வடிகளேயே,
"இப்பொழு தெம்மனேரால் இயம்புதற் கெளிதே யம்மா
செப்பரும் குணத்திராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு பின்பு அவ் வாசகம் உரைப்பக் கேட்ட
அப்பொழு தலர்ந்த செத்தா மரையினை வென்றதம்மா"
எனக் கம்பர் தமது இராமனது திருமுகப் பொலிவுக்கு, "அப்பொழுது அலர்ந்த செந்தாமரை” என இப்பாட்டில் இணைத்துப் பேசிக்கொண்டார் எனில், இதுபொருத்தமே ஆகும். பெரிய புராணத்தில் பூம் பாவையார் எழிலினைப் பேசுகையில் சேக்கிழார் “ஒவியர்க்கு எழுத ஒண்ணாப் பாட்டொளி ஒளிர்வுற் றோங்க" எனக்குறிப்பிட்டனர். இக்குறிப்பு நினவிற்கு வந்தே கம்பர் இராமனது அழகை வாலியின் வாக்கில் வைத்துப் புகழ்கையில் 'ஓவியத்தெழுத ஒண்ணா உருவத்தாய் ' என்று உளமுவந்து உரைத்தருளினர்.