பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் மீது பாடப்பட்டது. இம்மன்னனுக்கு முன்னும் பின்னும் அமைந்த சொற்களாகிய பாண்டியன் மாறன் என்பன அவன் மூவேந்தர் குடிகளுள் ஒன்றான பாண்டியர் குடியினன் என்பதைப் புலப்படுத்துகின்றன. இவனை பாண்டியர் குலத்து மன்னர்களுள் நற்பெயர் எடுத்த கல்லரசன்போலும் ! அதனால்தான் நன்மாறன் என்று கூறப்பட்டுள்ளான். இவன் வாழ்ந்த இடம் ஒரு பேர் அரண்மனை. அது பல விதமான அழகிய சித்திரங்களைக் கொண்டிருந்தது. அவ்விடத்தில் இவன் இருந்து வாழ்கையில், இவனது வாழ்நாட்கள் உலந்தபின் மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்கு விருந்தாகச் சென்றவன். இவ்வாறு இப்பாண்டிய மன்னன் தான்வாழ்ந்திருந்த மாளிகை யாகிய சித்திரமாடத்தில் உயிர்விட்ட காரணத்தால் பாண்டியன் சிந்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறன் என்று கூறப்பட்டனன். இவ்வாறு மன்னர்கள் எங்கெங்கிருந்து இறந்தனரோ, அவ்வவ்விடங்களையும் இணைத்து இன்ன இடத்தில் இறந்தமன்னன் என்று குறிப்பிட்டுவந்த வழக்கம் தமிழகத்துத் தொன்று தொட்ட வழக்கமாகும். இதனைப் பண்டைக்கால மன்னர்கட்கு அமைந்திருந்த பெயர்களைக் கொண்டு நன்கு உணரலாம். எடுத்துக்காட்டாகக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சேரமான் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சேரமான் சிக்கல் பள்ளித்துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன், சோழன் இளவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங் கிள்ளி சேட் சென்னி, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழன் குள முற்றத்துத் துஞ்சியகிள்ளிவளவன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி