பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

என்பதறியாவாறு திகைப்புறும் வண்ணம் செய்தாள் என்பதைத் தனிப்பாடல் திரட்டுப்பாடல் மூலம் அறியலாம். இப்பாடலில் குறிப்பிடப்பட்டது வரட்டி யாகும். எனவே, கம்பர் கவி எனில் அதற்கு நாட்டில் தனிச் சிறப்புண்டு.

கம்பரது கவி, கற்றோர் இதயத்தைக் களிக்கச் செய்வதன் இரகசியம் யாது? கற்றார் களிக்க எம் முறையில் அவர் கவிகளைப்பாட முடிந்தது? என்பன போன்ற வினாக்களுக்கு விடையை அவரது கவிகளைப் பார்க்குங்கால் உணரலாம். அதுபோது கம்பரது பரந்த புலமையும் புலனாகும். கம்பரது பல நூற் பயிற்சியும் தென்படுகிறது. இவற்றிற்கு அரண்செய்வனவாகக் கீழ்வரும் பாடல்களைப் பயின்றால் மேலே கூறிய உண்மை புலனாகாமல் இராது.

“புள்ளி மால்வரை பொன்னென நோக்கிவான்

வெள்ளி வீழ்இடை வீழ்த்ததெனத் தாரைகள்”

என்பது,

“வெள்ளிவெண்
கோல்நி ரைத்தன போல்கொழுந் தாரைகள்

வானி ரைத்து மணந்து சொரிந்தவே”

என்னும் சிந்தாமணியை ஒட்டியது.

“வரம்பில தோற்ற மாக்கள்
இறக்குமா றிதுஎன் பான்போல் முன்னை நாள் இறந்
                                                    தான் பின்னாள்
பிறக்குமா றிதுவென் பான்போல் பிறந்தனன் பிறவா

                                                    வெய்யோன்”

என்பது,

“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும் பி.சத்தல் உண்மையும்