பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

டத்தக்க சிறப்பினைச் செப்ப நீடு நினைந்தார். நினைந்த அவரது நினைவில் இராமனது அம்பு நினைவிற்கு வந்துற்றது. உண்மையில் இராமனது சிறப்பு இயல்பைக் காட்டக்கூடியவை பல இருந்தாலும், அவற்னுள் தலைசிறந்ததாக எடுத்துக் கூறத்தகும் பெருமை வாய்ந்தது அவ்விராமனது அம்புதான் என்று கூறின் இழுக்கு ஒன்றும் எய்தாது. தெலுங்கு மொழியிலும் இராமனது தனிப்பெருந் தகைமைகளுக்கு மூன்று செயல்கள் கூறப்படுகின்றன. அவையே “ஏகபாணம், ஏக தாரம், ஏகமாடா” என்பன. இங்குக் கூறப்பட்ட தொடர்களின் பொருள் முறையே, ஒரே அம்பு, ஒரே மனைவி, ஒரேசொல்” என்பதாகும். இதுகுறித்துத்தான் ஈண்டுக் காகுத்தன் கணை என்ற தொடர். கட்டுரையின் தலைப்பில் இணைந்துள்ளது. காகுத்தன் ஆவான் இராமபிரான் என்க. காகுத்தன் என்ற பெயரைக் குலசேகர ஆழ்வார் தயா தன் புலம்பல் என்ற தலைப்பில் தாம் பாடிய பாடல்களில் செம்மையுறத் தெரிவித்துள்ளனர்.

கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலை தன்
         குலமதலாய் குனிவில் ஏந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன்
         மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்பயின்றாய் இன்று இனிப்போய்
         வியன்கானம் மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ

         காகுத்தா கரிய கோவே!

என்ற பாடலில் காண்க.

கணையாவது அம்பு, ஆகவே, காகுத்தன் கணை என்பது இராமனது அம்பாகும். இவ்வாறான இராமனது அம்பின் மாட்சி சிறப்புறப் புலப்படுத்தப்பட்ட மூவிடங்கள் யாவை என்றாய்தலே அடுத்த கட்டமாகும்.