பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

புடையவன் இறைவன் என்பதை அன்பால் தன்னை நினைப்பவர்களுடைய மனத்தாமரையில் விரைவில் சென்று குடிபுகுபவன் என்பதிலிருந்து நாம் உணரலாம். இதை வற்புறுத்தவே பெருநாவலராம் திருவள்ளுவர் “மலர்மிசை ஏகினான்” என்று இறைவனைக் கூறலுற்றனர். இக்கருத்தை ஒட்டியே திருநாவுக்கரசரும், இறைவனை “மனத்தகத்தான்” என்று போற்றியுள்ளார். “என் உடல் இடங்கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறு” என்று கூறினர் மணிமொழியார். “நஞ்சுடை கண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மை நயந்து” என்றருளிச் செய்தனர் ஆளுடைய பிள்ளையார்.

இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். “இவன் தனக்கு வேண்டியவன்; இவன் தனக்கு வேண்டாதவன்” என்று கருதும் இயல்பு அவ்விறைவன்மாட்டு இல்லை. “ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான்.” இதனால் அன்றோ அவன் கொடிய விடமுடைய பாம்பினையும் தன்மீது அணிந்து கொண்டனன் என்பர். விருப்பு வெறுப்பு இல்லாதது இறைமைக்குணம் என்பதை இறைவன் ஞானசம்பந்தர்க்கு ஞானப்பால் கொடுத்து, அவரைத் தனக்கு அன்பனாக ஆக்கிக்கொண்டதனாலும், அப்பர்சுவாமிகட்குக் கொடிய சூலைநோய் தந்து அவரையும் அன்பராக்கிக் கொண்டதாலும் நன்கு உணரலாம். இந்நிகழ்ச்சி இறைவனது விருப்பு வெறுப்பு உணர்ச்சியினையா காட்டுகிறது? அவனது அறக்கருணை, மறக்கருணே மாட்சியினை அன்றோ காட்டுகிறது?

இந்தப் பண்பாடுகளே அறிந்தன்றோ வள்ளுவப் பெருந்தகையார் முன் கூட்டியே தம் பாவில் இறைவன் இயல்பு இன்னது என்பதை “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்று