பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்னி மீது தரித்துக் கொண்டனன். பின் தன் அரசு யானை மீது இவர்ந்தனன். அந்த அமயத்து ஆடகமாடமாம் திருவனந்தபுரத்தில் திருப்பள்ளி கொண்டுள்ள திருமாலின் பிரசாதமாகிய துளசி மாலையைச் சிலர் கொண்டுவந்து இவனை வாழ்த்தி வணங்கிக் கொடுக்க, அதற்றை அன்புடன் பெற்றுத் தன் தலையில் சூட்டிக்கொள்ளாமல், தன் திருத் தோளில் தாங்கிச் சென்றனன்” என இளங்கோ அடிகளே கால்கோட் காதையில் கழறியுள்ளார். சென்னியில் தாங்காது, மணித்தோளில் தாங்கியதற்கு அவரே காரணங் காட்டுகையில், "செங்குட்டுவன் சென்னி சிவனாருடைய திருவடி சூட்டப்பட்டு விட்டமையின், அங்குத் திருமால் சேடம் இருத்தல் முறையன்று எனக் கருதித் தன் திருத்தோளில் தாங்கிச் சென்றனன்” என்றார், இக் கருத்தினை :

“ ஆடக மாடத் தறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினன்”

என்னும் அடிகளால் நன்கு உணரலாம். தந்தையும் தமையனும் வழிபட்டு வந்த சைவ சமய மரபில் தோன்றியவர் இளங்கோ அடிகள். ஆகவே, இளங்கோ அடிகளும் சைவராகத்தான் இருக்க வேண்டும் என அறுதியிட்டு உறுதியாகக் கூறி விடலாம். ஆனால், அவ்வாறு கூறிவிட இயலாது. முன்னோர் சமயத்தையே பின்னோர் மேற்கொள்ள வேண்டும் என்னும் கட்டுப்பாடும் நியதியும் இல்லை. எனவே, இளங்கோ அடிகளும் சைவசமயத்தைச்சார்ந்தவர் என்பதைச் செப்புதற்கு இடம் இல்லை. இவர் துறவு பூண்டதும், ' “குணவாயிற்