பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமறுப்புலவர் உணர்த்திய பாலே #7.

மூவிலே நெடுவேல் காளிiற் றிருப்ப முறைமுறை கெட்டுடல் கரும்பேய்

ஏவல்செய் துறைவது'

எ ன் று பாடியுள்ளனர். இ த ைல் உமறுப்புலவர் எதனையும் மரபு கெடாது மொழியவல்லவர் என்பது புலனுதல் காண்க

உமறுப்புலவர் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தவர். பல தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைப் படித்தவர். படித்தவற்றைத் தாம் பாடியுள்ள சீருப்புராணத்தில் புகுத்தித் தமது நூலைப் பொன்மலர் மணம் பெற்றது போல மேன்மையுறச் செய்தவர். அவரது நூலில் பல சிங்தைக்கினிய கற்பனைகளையும், அரிய நீதிகளேயும் காணலாம். ஆகவே, சீருப்புராணத்தைப் படித்து அதன் இலக்கியச் சுவையை இனிது நுகர்தல் நம்ம னேர் கடம்ை.