பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறித்தவர் தமிழ்த் தொண்டு 99

மகரமே சுருப்பூந் தாதாம்

வசிகூர்மை வசியம் வாளே அகம்மனம் மனேயே பாவம்

அகல்இடம் உள்ளும் ஆமே

என்னும் பாட்டால் உணரலாம். இப்பாட்டின் மூலம் பகவன், பகல், மகரம், அகம் என்னும் சொற்களின் பொருள்களை அறிகிருேம்,

ஆனல், இக்காலத்தில் சொற்களை அகரவரிசையில் கண்டு அவற்றின் பொருளே உணர்கிருேம். இம் முறைப்படி அமைந்த நூலே அகராதி எனப்படுகிறது. இங்த எளிய முறையினே அமைத்துத் தங்தவர்களும் கிறித்தவப் பாதிரிமார்களே. முதல் முதல் தமிழில் அச்சு நூல்களே அச்சு வாகனத்தில் ஏற்றி அச்சு நூல் களேத் தங்தவர்களும் இவர்களே. இவையே அன்றித் தமிழினே அவர்கள் நன்கு பயின்று, மேற்குநாட்டவர்கள் பலரையும் பயிலுமாறு செய்ய நங்தம் தமிழ் நூல்களுள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களும் ஆவர். இவ்வாறு பல்லாற்ருலும் தமிழுக்குத் தொண்டு புரிந்த பெரியோர்களுள் இருவர்களைப்பற்றிச் சிறிது பார்ப்போமாக.

வீரமாமுனிவர்

இவர் இத்தாலி தேசத்தில் பிறந்தவர். இவரே கான்ஸ்டண்ட்டின்,ஜோஸப்பெஸ்கி என்பவர். இவரைத் தைரியகாதசாமி என்றும் கூறுவர். இவர் கி. பி. பதி னேழாம்நூற்ருண்டில் தோன்றியவர். தமது கிறித்தவச் சமயத்தைப் பரவச்செய்யத் தமிழ் நாட்டிற்கு வந்தவர். இவர் இந்தியர்களைப்போல நடை, உடை, பாவனை