பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வத்தின் சிறப்பு 109

ன்சொல்லன் தாழ்நடை ஆயினும்ஒன் றில்லானேல் துன்சொல்லின் அல்லது வாய்திறவா-என்சொலினும் கைத் துடையான் கால்கீழ் ஒதுங்கும் கடல்ஞாலம் பித்துடைய அல்ல பிற

என்றும், சீவகசிந்தாமண்ணி செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்துநீர் மாங்தர்' என்றும் கூறுதலே உணர்க. இத்தகைய கருத்தில், ஏழையைக் கண்டால் மோழை பும் பாயும் கையில் பணம் உண்டானல் காத்திருப்பார் ஆயிரம்பேர்’ என்னும் பழமொழிகள் நாட்டில் வழங்கு தலேயும் அறிக.

உலக மக்கள் அருள், அன்பு என்னும் பண்புகளைச் சிறப்பாகக் கொண்டுள்ளனர். அருள், அன்பு இன்ன தன்மையன என்பதை விளக்கவந்த பரிமேலழகர், அரு ளாவது தொடர்பு பற்ருது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை என்றும், 'அன்பாவது வாழ்க்கைத்துணையும் புதல்வரும் முதலிய தொடர் புடையார்கள்மேல் காதல் உடையார் ஆதல் என்றும் விளக்கிப்போக்தார். இத்தகைய அருளுக்கும் அன்புக் கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை முதற்பாவலர், 'அருள் என்னும் அன்பீன் குழவி என்பர்.

அன்பின் வளர்ச்சிக்குச் செல்வமே செவிலித்தாய் என்பது தேவர் கருத்து. இத்தகைய சிறப்புடைய பொருளே 5 ம் தேடவேண்டுவது இமது கடமை அன்ருே ?

இதுகுறித்தே தெய்வப்புலவர், நாம் செல்வத்

தைத் தேடவேண்டும் என்பதை வ ற் புறுத் தி க் கட்டளை இடுவார் போன்று, செய்க பொருளே’ என்