பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. காவற்பெண்டு

சங்க காலம் ஒரு பொற்காலம். அக்காலத்துப் புலவர் பெருமக்கள் பாடியுள்ள பாடல்களாலேயே இன்று நாம் தமிழர் என்ற பெருமையுடன் தலைநிமிர்ந்து கிற்கின்ருேம். நமது பண்டைய பெருமையின் உணர் கின்ருேம். நாகரிகத்தில் கனிசிறந்தவர்கள் என்ற பெரு மிதத்துடன் துலங்குகின்ருேம்; பிற நாட்டவர்களும் நமது தொன்மையினேயும் மேன்மையினேயும் போற்றிப் புகழ்கின்ற நிலயைப்பெற்றுள்ளோம். இவை உண்மை; வெறும் புகழ்ச்சியல்ல.

இங்ங்னம் பெருமை தரத்தக்க நிலையில் இருந்த வர்கள் ஆண்பாற் புலவர்கள் மட்டும் அல்லர்; பெண் பாற் புலவர்களும் ஆவர். சங்ககாலத்தில் திகழ்ந்த பெண்பாற் புலவர் பலர். அவர்களுள் ஒருவரே காவற் பெண்டு என்னும் பெயருள்ள பெண்பாற் புலவர்.

இவ்வம்மையார் தம் இயல்புக்கு ஏற்ற தொழிலே மேற்கொண்டே புலவர்மணியாயும் திகழ்ந்தவர். இவர் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துவரும் அரிய பொறுப்பு வாய்ந்த பணியினை மேற்கொண்டு விளங்கியவர். இதனை இவர்க்கு அமைந்துள்ள பெயர் கொண்டே உணர்ந்துகொள்ளலாம். இவ்வம்மையார் பெயர் காவற்பெண்டு என்பதே. இவ்வம்மையார்க்கு இவர் பெற்ருேர் எப்பெயர் இட்டு அழைத்தனர் என் பதை காம் அறிதற்கு இல்லை. காவல் என்பது ஈண்டு வீடு காவலோ, நாடு காவலோ, வாயிற் காவலோ அன்று;

8