பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவற்பெண்டு II Ꮌ

என்பதையும், எங்கு யாருக்குக் காவற்பெண்டாய் இருங் தவர் என்பதையும் அறியவேண்டுவது நமது கடமை யாகும்.

இவ்வம்மையார் சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியை வளர்த்த செவி லித் தாயர் ஆவர். அதாவது, காவற்பெண்டு ஆவர். இவ்வம்மையார் சோழமரபில் வங்த பிள்ளையை அன்புடன் தாதல் புரிந்து வங்த காரணத்தால், காதற்பெண்டு என்றும் வழங் கப்பட்டவரானர். இக்காதல், தாய்மைக் காதல். மக்களிடத்தில் குழங்தைகளிடத்தில் காதல் காட்டு தலேக் கடந்துளோர்களும் கடப்பரோ மக்கள்மேல் காதல்' என நைடதத்தில் வரும் அடியால் அறிக.

சோழ ன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி, தித்தன் என்னும் பெயரிய சோழனுக்கு மகனவன். தித்தன் உறையூரில் இருந்த சோழன். நொச்சிவேலித் தித்தன் என அகநானூறு கூறுகிறது. நொச்சி மரங் களே வேலியாக உடைய உறங்தையில் வாழ்ந்த தித்தன் என்பது இதன் பொருள். இவ்வாறே இவன் உறங்தை யில் இருந்தவன் என்பதைப் புறநானூறும், 'மாவண் தித்தன் வெண்ணெல் வேலியுறங்தை' என்கிறது. உறங்தை என்பது உறையூர் ஆகும். தித்தன் வீரத்தி லும் ஈரத்திலும் சிறந்தவன். இதனை, வெல்போர் அருங்தித்தன் என்றும் மாவண் தித்தன்' என்றும் இவனைப்பற்றிக் கூறியிருப்பது கொண்டு தெளிக. இவ்வாறு இவனது வீரத்தைச் சாத்தங்தையார் என் னும் புலவரும், இவனது கொடைச்சிறப்பைப் பரண ரும் புகழ்ந்து கூறியுள்ளனர்.