பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 16 கட்டுரைக் கொத்து

மதுரை நக்கீரர், சோழநாட்டுப் பிடவூர்கிழார் மதன் பெருஞ்சாத்தனப் பாடிய பாட்டில் தித்தனேயும் பாடியுள்ளார் எனில், தித்தனது சிறப்பு நமக்குப் புல கிைறது. அப்பாட்டில் தித்தன் நல்ல அறிவையே அணியாகப் பெற்றவன் என்றும், சீர்சான்ற விழுச் இறப்புடையவன் என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளான் இத்துடன் இன்றி, யானைப் படையுடையவன். அத ளுேடு யானே வன்மையையும் பெற்றவன் என்ற பொருளில் 'சிறுகண் யானைப் பெறலருங் தித்தன்' என்றும் புகழப்பட்டுள்ளான்.

இத்தன் வாழ்ந்த உறையூரின் சிறப்பைப் புலவர் பலர் பாடிப் புகழ்ந்துள்ளனர். மதுரை நக்கீரர் செல்லா நல்லிசை உறங்தை' என்கிருர். அதாவது, கெடாத நல்ல புகழையுடைய உ றங்தையாம். வெண் இது வேலி உறங்தை' என்பர் பரணர்.

மதுரை நக்கீரர் உறங்தையின் உழவர்களின் இயல்பை நன்கு இயம்பியுள்ளனர். அவர்கள் மருத நிலத்தை நன்கு உழுது உண்டும் தமக்குத் துணையாய் இருந்து உழைக்கும் எருதுகள் வயிருர உண்டு உவக்க முல்லை நிலங்களில் மேய விடுவர் என் றும், முயல் இறைச்சி, வாளே மீன், பழஞ்சோறு இவற்றைப் புசித் துப் பூரிப்பர் என்றும், மலர்குடி மகிழ்வர் என்றும், கள்ளப் பருகிக் களிப்பு உறுவர் என்றும் பாடி மகிழ் கின்ருர்.

அவர் மாதர்களைப்பற்றிக் கூறும்போது, மூங்கில் போலும் தோளையுடையவர்கள், மென்மையான சாய லேப்பெற்றவர்கள், தினையுண்ண வரும் கிளிகளே ஒட்டு பவர்கள் என்றும் பாடியுள்ளார்.