பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கட்டுரைக் கொத்து

கோழி நாய்கன் மகள் நக்கண்ணே யாராம் பெண்பாற் புலவரும் பாடியுள்ளனர்.

சாத்தங்தையார் பாடல்களால் இவனது வீரமும், முக்காவல் காட்டு ஆமூர் மல்லனே வென்றதும் அ றிய வருகின்றன. நக்கண்ணையார் பாடல்களால் அவ்வம்மை யார் இவனேக் காதலித்த குறிப்பும் காணப்படுகின்றது. சாத்தந்தையார் இவனேப் பாடிய பாடல்கள் மூன்று. நக்கண்ணேயார் பாடிய பாடல்களும் மூன்று. இந்த ஆறு பாடல்களும் புறநானூற்றில் இன்றும் பொலி கின்றன.

போரவைக் கோப்பெரு நற்கிள்ளி, சோழமரபினன் என்பதை ஆர்கார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் கவிகை மன்னன் என்பதைச் சாத்தங்தையார் இவனைப் பற்றி அறிவிக்கும் அடியால் அறியலாம் அதாவது, நாரால் கட்டப்பட்ட ஆத்தி மாலேயினேயும், பிறர்க்கு ஈயக் கனிந்த கையையும் உடைய வீரன் என்பது. நல்ல குடிப்பிறந்தார் கல்கூர்ந்தார் ஆலுைம், இல்லை என மாட்டார் இசைந்து' என்பது நம் முன்னேரது நடை முறை வாக்கன்ருே ? ஆகவே, இவனது கை, கொடுக்கக் கவிந்த கை ஆயிற்று. ;

போரவைக் கோப்பெரு நற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனெடு போர் தொடுக்கவேண்டிய வாய்ப்பு நேர்ந்தது. இவனே நாடிழந்தவன்; தங்தை யாரின் சார்பு நீங்கினவன். இவனுடன் போர் புரிய வருபவன் சிறந்த வீரன். மல்லன் என்னும் பெயரே அவனது உடல் வன்மையினையும், மற்போர் தொடுக்கும் திறனையும் வெளிப்படுத்தி நிற்கிறது. ஆகவே, பெரு நற்கிள்ளி காலாட்படையுடனும் யானைப்படையுடனும்