பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

潭32 கட்டுரைக் கொத்து

தமையின் காளைக்கும் மயிலுக்கும் மணம் நடந்ததாகக் கூறினர்.

தனதத்தர் பெருந்தனிகர். புனிதவதியார் அவர் குடிக்கு அரும் புதல்வி. அவர் இவ்வொரு மகவன்றி (வேறு மகவு பெருதவர். ஆதலின், தம் அருமை மக காரை அகன்றிருக்க மனங்கொண்டிலர். என்ருலும், த அனிமாடத்தில் தம்பதிகள் வதியவும் எண்ணங் கொண்டிலர். பின் யாது செய்தனர்? தம் மருமகனர் பொங்கொலி நீர் நாகைக்கும் போகாவண்ணம், தம் பதியின் மாடே, அணிமாடம் தனித்தமைத்துப் புத் தகம் புகும் விழாவும் இனிது கடத்தி, அங்கு வாழ ஏற்பாடு செய்தனர். இதுவே அறிவுடைச் செல்வர் ஆற்றும் செயலாகும். இவ்வாறே கோவலன், கண் ன் இயை மணந்த பின்பு அத்தம்பதிகள் தனித்து வாழவே இருசார் இருமுது குரவர்களும் நேர்ந்து, அத் தம்பதிகளே மனயறம் இயற்ற ஏற்பாடு செய்தார்கள் அனர் சிலப்பதிகாரம் செப்புகின்றது.

புனிதவதியார் பரமதத்தன் உடன் கூடி இல் லறத்தை இனிது கடத்த லானர் , துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும் துணையாய் இருங் தனர். இவ்விரு தம்பதிகள் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் ஆதியோர்க்குத் தம் கடன்களை ஒழுங் காக நடத்தி வந்தனர் : இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நற்றுணையாய் இருந்தனர். இம்முறை யில் பாங்கில் வரும் மனையறத்தின் பண்பினின்று. வழாது இவர்கள் வாழ்வாராயினர். ஆனால், புனித வதியார் மட்டும் உம்பர்பிரான் திருவடிக்கீழ் உணர்வு மிக ஒழுகினர்.