பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 135

தோகைக்கும் ஒன்ருய் வரும் இன்ப துன்பங்கள்’ என்பதைச் சிறிதும் சிந்தித்திலன். புள்ளினங்கட்கும், விலங்கினங்கட்கும் தம் துணையிடத்து வைத்த அன்பு தானும் இவன்பால் இல் லபோலும் !

'துடியடிக் கயந் தலே கலக்கிய சின் னிரைப்

பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறு’

'அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை

மென்சிறக ரால்ஆற்றும் புறவு”

'இன்னிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்குத்

தன்னிழலைக் கொடுத் தளிக்கும் கலே’ என்று அன்ருே கற்றர் ஏத்தும் கலி கழறுகிறது ?

‘சுனே வாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்

பிணமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி' என்று அன்ருே ஐக்திணை ஐம்பது அறைகிறது ? இதன்ருே அன்பின் மாட்சி ! இப்பண்பாடு இவன் பெற்றிலன் என்பதை விளக்க அன்ருே இவனேக் காளை என்ருர் கவிஞர்.

புனிதவதியார் அதுபோது யாது செய்தார் ? "பெண்டிர்க் கழகு எதிர்பேசா திருத்தல்' என்னும் சிரிய கொள்கையராய், அனேயதொரு மாங்கனியைக் கொண்டு வர அணைவார்போல் உள் புக்கார். உற்ற இடத்து உதவும் பரமனே உளத்துக்கொண்டு பரவினர். இறை அருளால் ஒரு மாங்கனி அவ்வம்மையார் அங்கையில் வந்துற்றது. அதனேக் கொண ர்ங் து அன்புடன்