பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கட்டுரைக் கொத்து

பொன்னுரைக்கிணங்கத் தான் ஈட்டிய பொருள் வளர்த லின்றி வாளா இருக்க ஒருப்படாதவய்ை, அது வட்டி ஈன்று வளர நிதி சேமிக்கும் இடத்தில் உய்த்தான் போலும் ! அவ்வாறு செய்தான் என்பது ஒப்பில்மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து' என்னும் அடி விளக்குகிறது. இதனால் இக்காலத்துப் பாங்கு (Bank) என்பதையே புலவர் ஒருவழி என்று குறித் தனர் போலும். செ ல் வ ப் பெருக்கிற்குச் செய்ய வேண்டிய செயலேப் புரிந்த வணிகன், தன் வாழ்க் கையை இன்புடன் கழிக்க. ஆண்டே தன் குலத்தைச் சார்ந்த நலங்தரு நங்கை ஒருத்தியை நன்மணம் புரிங் தனன். மணம்புரிந்ததன் பயனுக மகளொன்றும் பெற் றெடுத்தான். பெற்ற மகவுக்குப் புனித வதி என்ற திருப்பெயரையே வைத்திட்டான். பரமதத்தன் மக வுடனும் மனேவியுடனும் மனம் மகிழ்வு கொண்டு பாண்டியநாட்டில் பண்புற வாழலான்ை.

இஃது இவ்வாருகப் புனிதவதியார் கணவனுர் வருகை நோக்கித் தம் கற்புநெறி கடவாது வாழ்ந்து வந்தனர். க ண வர் கன்னி நாடெய்திக் கன்னி ஒருத்தியை மணந்து களிப்புடன் வாழ்வதைச் சிறிதும் அறியார் அம்மையார். ஒரு நாள் இன்றேனும் பல நாள் சென்றபின்பு உண்மை வெளியாதல் ஒரு தலை. பரமதத்தன் செயல் பரவலாயிற்று. அவனது செய லேக் கேட்ட அம்மையாரின் கிளைஞர் சிறிதும் தாமதி யாது நேரே அவனேக் காணக் கன்னி நாடடைந்தனர் : உண்மை உணர்ந்தனர். எனினும், அவனுடன் உரை யாடலராய், மற்றவன் இருந்த பாங்கர் நற்றிருவனேய கங்கையை கண்ணுவிப்பதுவே கடன் என்று முடிவு