பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 143

இவ்வாறு உருவும் திருவும் ஒருங்கே அமையப் பெற்ற இவ்வம்மையார் கணவருக்கு உகந்தது ஆகாத வாழ்வை உடனே வெறுத்தார். தமக்கு அமைந்த வனப்புப் பிறர் மகிழ இன்றிக் க ண வரு க் .ெ ன அமைந்ததென்று எண்ணி. இவருக்காகத் தாங்கிய வனப்பு என்று கூறி அதனே எள்ளி, இறைவ, இத் தசைப் பொதி கழித்துப் பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற அளித்தல் வேண்டும் என்று பரவி நின்ருர். அம்மையார் எண்ணிய எண்ணியாங்கு வான மும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் உற்ருர். இதல்ை இவ்வம்மையாரை அழகைத்துறந்த அணங்கு என்று கூறுதல் பொருத்தம்தானே ?

அம்மையார் நிலையைக் கண்ட ஒக்கலும் நட்பும் பரமதத்தன் கூற்றை உண்மை என்று உணர்ந்தனர். அவர்களும் தொழுது இறைஞ்சி அகன்றுபோனர். அம்மையார் கருவிலே திருவுடையார் ஆதலின், அப் பொழுதே இறைவன் மீது பாடவும் தொடங்கினர்.

'பிறந்தமொழி பயின்றபின் எல்லாம் காதற்

சிறந்தகின் சேவடியே சேர்ந்தேன்-கிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானேர் பெருமானே ! எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

என்பது முதலாக நூறு பாடல்களைப் பாடினர். அதுவே "அற்புதத் திருவந்தாதி என்பது. இத்துடன் இரட்டைமணிமாலே என்னும் இருபது பாடல் அடங்கிய நூலேயும் பாடி, இறைவன் இருந்த கைலே நோக்கித் தலே அன்பால் தலையால் கடந்து செல்வாரானர். இவரது வருகையை இமயவல்லி இனிதுற நோக்கி இறைவ