பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கட்டுரைக கொத்து

அழகைத் துறந்த அணங்காம் புனிதவதியார் என்னும் காரைக்காற் பேயார் ஆளுடைய பிள்ளே யார்க்கு முற்பட்டவர். இதனைத் தொண்டர்சீர் பரவு வார் தம் திருத்தொண்டர் புராண வாயிலாகத் தெளிவு படுத்திக் கூறியுள்ளார். புகலி வேந்தர் வாக்கும் இக் கருத்துக்கு அரண் செய்கிறது. ஞானபோனகர் தமது தலயாத்திரையின்போது, தொண்டை காட்டைத் தொழுதுகொண்டு வருகையில், திருவாலங்காட்டிற்குச் சென்று அண்டமுற கிமிர்ந்தாடும் ஆலங்காடனேவழுத்த அப்பதி நோக்கி வந்தனர். அப்பதி அம்மையாய் காரைக்காற் பேயார் தம் கால்கொடு நடவாது தலே கொடு நடந்து சென்று போற்றப்பட்டதை அறிந்து, அப்பதியைத் தம் காலால் மிதிக்க அஞ்சிப் பக்கத் தில் இருந்த ஒரு சிற்றுாரின்கண் தங்கினர். இங் நிகழ்ச்சிகளைக் கவிஞர் பெருமான் சேக்கிழார் குறிப் பிடுகையில்,

இம்மையிலே புவியுள்ளோர் யாவருங் காண

ஏழுலகும் போற்றிசைப்ப எம்மை யாளும் அம்மைதிருத் தலையாலே நடந்து போற்றும்

அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று தம்மையுடை யவர்மூதூர் மிதிக்க அஞ்சிச்

சண்பைவருஞ் சிகாமணியார் சாரச் சென்று செம்மைநெறி வழுவாத பதியின் மாடோர்

செழும்பதியில் அன்றிரவு பள்ளி சேர்ந்தார்

என்று பாடி விளக்கினர்.

இன்னணம் தோணிபுரத் தோன்றலார் செழும்

பதியில் தங்கி அன்றைய இராப்போது உறங்குங் காலத் தில், அவ்வுறக்கத்தின் கண் உமையொரு பாகனர்