பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமறம் 15

இவை வெறும் மறச் செயலேக் குறிப்பன. இவை திருமறம் ஆகா. ஆல்ை, இறைவரது கண்ணில் குருதி கண்டு அதனை நிறுத்துதற்குச் செய்த செயலே திருமற மாகும். இது திருமறச் செயல் என்பதை ஆசிரியர்.

புனமருந் தாற்றப் போதா தென்று

தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப என்று கூறியிருத்தலேக் காண்க. இந்த அளவோடு திண்ணனரின் திருமறம் கின்றுவிட்டதோ ? இல்லை. இறைவர் தமது மற்ருெரு கண்ணிலும் செங்ர்ே சிந்தக் காட்டினர். அது கண்டும் அஞ்சாத திண்ணனர் தமது திருமறச் செயலே இனிது கிலேகாட்டியதை,

ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம் பொழிந்த கண்ணிர்க் கலுழி பொங்க அற்ற தென்று மற்றக் கண்ணையும் பகழித் தலையால் அகழ என்று அறிவித்துள்ளனர் ஆசிரியர். இத்தகைய செயற் கரும் மறச் செயல் அன்ருே திருமறம் என ஈண்டுக் கூறப்பட்டது ? இதனை வியந்தன்ருே "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை' என்றனர் திருவாதவூரர் !

இங்ங்ணம் தமது இரண்டாவது கண் ணே யும் திண்ணனர் தோண்ட முயன்றபோது, தரித்திலர் தேவ தேவர். அவர் அவரை அவ்வாறு செய்யாது தடுத்தனர். அத்தடைச் செயல் எங்ங்ணம் நிகழ்ந்தது என்பதை "ஆண்டகை ஒருகையாலும் இருகை பிடித்து' என்ற அடியில் காட்டினர் ஆசிரியர். ஒரு கையால் இரு கை பிடிக்க எவ்வாறு இயைந்தது என்ற ஐயம் நம்ம ைேர்க்கு எழாதிருக்கவே, "ஆண்தகை" என்ற சொல்