பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கபிலர்

சங்க காலப் புலவர்களுக்குள் பெருமை பெற்ற வர்களுள் கபிலரும் ஒருவர் ஆவார். இவர் அக் காலத்திலேயே இவரைப் போன்ற பெருமக்களா லேயே பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டனர் என்ருல், அவரது அறிவின் மேம்பாட்டையும் பெருமையின் மாண்பையும் கூறவேண்டா அல்லவா ? நக்கீரனர் இவரைப் பலர்புகழ் கல்இசை வாய்மொழிக் கபிலன்' என்றும், பெருங்குன்றுார்க்கிழார், 'கல்இசைக் கபிலன்' என்றும், பொருந்தில் இளங்கீரனர் வெறுத்த கேள்வி விளங்குபுகழ் கபிலன்' என்றும், மாருேக்கத்து நப்பசலே யார் 'பொய்யா நாவில் கபிலன்' என்றும் உளமாரப் புகழ்ந்து பாடியுள்ளார்.

இத்தகைய பெரியராம் கபிலர், பாண்டியங்ாட்டைச் சார்ந்த திருவாதவூரில் பிறந்தவராவார். இதனைத் திரு வாலவாயுடையார் திருவிளையாடல் பாடலாகிய,

‘காதல்கூர் பனுவல் பாடும் கபிலனர் பிறந்த மூதூர் வேதநாயகர்ை வாழும் வியன்திரு வாத ஆரால்'

என்பதல்ை அறியலாம்.

கபிலர் அந்தண மரபினர் ஆவார். இந்த உண்மை இவரது வாய்மொழியாலும், பிறர் கூறும் கூற்ருலும் வலியுறும், யானே பரிசிலன் அந்தணன்' என்றும், 'அந்தணப் புலவன் கொண்டு வந்தனனே' என்றும் புறநானூற்றில் இவர் பாடியுள்ள பாடல்களில் காணப்