பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படும் தொடர்களாலும், மாருேக்கத்து நப்பசலையார், இவரைக் குறிப்பிடும்போது ‘புலன் அழுக்கற்ற அந்த ணன்' என்று கூறி இருப்பதனுலும் அறியலாம்.

இவர் மதுரைக் கடைச்சங்கப் புலவருள் ஒருவ ராயினும், மதுரையையே தமது வாழ்க்கைக்குரிய இட மாகக்கொண்டு வாழாமல், பலப்பல இடங்கட்குச் சென்று பல வள்ளல்களைப் பாடி அவர்களை மகிழ்வித் தும் தமது கடமைகள் பலவற்றைச் செய்தும் வங் துள்ளார்.

கபிலர் பாடிய நூற்கள் பலவாக உள்ளன. பத்துப் பாட்டில் குறிஞ்சிப்பாட்டு இவரால் பாடப்பட்டது. இப்பாட்டுப் பாடியதன் முக்கிய நோக்கம், ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ச்சுவையை அறிவுறுத் தற்காகவே ஆகும். இப்பாடலே இவன் தமிழின்பால் தணியா வேட்கை கொண்டு தானும் சங்கப் புலவருள் ஒருவகை இருக்கும் பேறுபெற்று ஒரு தமிழ்ப் பாடலே யும் பாடியருளக் காரணமாயிற்று என்று யூகிக்க இடம் இருக்கிறது. குறிஞ்சிப்பாட்டில் மாலேக்காலத் தில் பறவைகளும் விலங்குகளும் மக்களும் செய்யும் செயல்கள் நல்ல முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மாதர் அந்திக்காலத்தில் விளக்கேற்றி வீட்டினை விளக்க முறுத்தும் செயலே வளமனப் பூங்தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி' என்று குறிப்பிட்டுள்ளார். இப் பாடலின் மூலம் பல மலர்களின் பெயர்களே அறிய

Q) sist D.

பதிற்றுப்பத்து என்னும் நூலில் ஏழாம் பத்துச் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்மீது பாட ப்