பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கட்டுரைக் கொத்து

என்ற கலி யடிகளில் காண்க. இதனால் அரசர்கள் மிகவும் விழிப்புடன் இருந்து ஒவ்வொரு காரியத்தை யும் கவனித்தல் வேண்டும் என்னும் குறிப்புத் தோன்று கிறதன்ருே ?

இரங்தார்க்கு ஒன்றும் ஈயாது வாழ்தலினும் சாதலே மேல் என்னும் பண்பாடு கம்மவர்க்கு இருந்த தைக் கபிலர் கலிப்பாவில்.

'ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்ருது வாழ்தலின்

சாதலும் கூடுமாம் மற்று'

என்று நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். இங்த அளவில் கூட நம் பண்டைய பண்பாட்டை இவர் குறிப்பிட்டு கிறுத்தவில்லே. தமக்கு இனிது என்ற காரணத்தால் பிறர்க்கு இன்னது செய்யமாட்டார்கள் நம் முன்னேர் என்பதை,

"தமக்கு இனிது என்று வலிதில் பிறர்க்குஇன்ன

செய்வது கன்ருமோ மற்று'

என்ற அடிகளில் அழுத்தம் திருத்தமாகப் பாடி வைத் துள்ளார். இன்னேர் அன்ன கருத்துக்களே அந்நூலில் காணலாம்.

இவர் பாடிய புறநானூற்றுச் செய்யுளால்தான் இவரது கடப்பாட்டு உணர்ச்சியும், இவர்க்குப் பாரி என்னும் வள்ளல்பால் இருந்த நட்பு உரிமையும் நமக்கு நன்கு புலனுகின்றன.

சேரமான் கடுங்கோ வாழியாதனேத் தனித்த முறையில் பத்துப் பாடல்களில் பாடி நின்றதோடு