பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கட்டுரைக் கொத்து

கொள்ளுமாறு பணித்தனர். அத்தகையவனது வீரத் தையும் அவனது காட்டின் வளத்தையும் சுவைபட இவர் சுருக்கமாகப் பாடி இருப்பதைப் பார்க்கும் காலத்து இவரது புலமை நன்கு புலகுைம்.

'அடங்கா மன்னரை அடக்கும்

மடங்கா விளையுள் காடுகிழ வோயே!”

என்ற சுருங்கிய அடிகளில் மேற்கூறிய கருத்துக்கள் அடங்கி இருப்பதைக் காண்க,

பாரி என்னும் வள்ளலுக்கும் கபிலருக்கும் இருந்த நட்பு மிகுதி என்பது எவரும் அறிந்த உண்மை. பாரி முல்லைக்குத் தேரை ஈந்த முதிர்ந்த ஈகையாளன் என்ப தைப் பலப்படி இவர் பாடியுள்ளார். விச்சிக்கோ என்பா னிடம் பாரி மகளிரைப்பற்றிக் குறிப்பிடுகையில் 'முல்லைக்கொடி காத்தழும்பு இருப்பப் பாடாதாயினும் கறங்கும்ணி நெடுங்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர் என்றனர். ஒரு சமயம் மூவேந்தர் பாரியின் பறம்பு மலையினே முற்றுகை யிட்டனர். அதுபோது அவர்களைப் பார்த்து, முடி யுடை மூவேந்தர்களே ! நீங்கள் எங்கள் பாரியின் பறம்பு மலையினை முற்றுகையிட்டு அதனைக் கொள்ள எண் ணும் எண்ணம் பயனற்றது. அதனேக் கொள்ளவேண்டு மால்ை, இரவலர்களைப்போல வந்து பாரியை அணுகி யாசகமாகப் பறம்பு மலேயினேக் கேளுங்கள். அவன் இல்லை என்னது ஈயும் கடப்பாடுடையவன். ஆதலின், நீங்கள் கேட்ட பறம்பு நாட்டைப் பரிவுடன் ஈவன் என்