பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

பூக்கள் ஒன்ருேடொன்று இணைந்து காணப்பட்டால் அத னேப் பூங்கொத்து என்கிருேம். அதுபோல இந்நூலில் கட்டுரை கள் பல இணேந்து இருத்தலின் இது 'கட்டுரைக் கொத்து' என்னும் பெயருடன் திகழ்கிறது.

இந்நூலில் காணப்படும் கட்டுரைகள் அனைத்தும் என்னல் எழுதப்பட்டவைகளே. ஆளுல், இவை யாவும் ஒரே சமயத்தில் எழுதப்பட்டவை அல்ல. இவை பல்லாண்டுகட்கு முன்பு அவ் வப்பொழுது திங்கள் தாள்களிலும், கினைவு மல்ர்களிலும், ஆண்டு மலர்களிலும் வெளிவந்தவை. நான் எழுதியுள்ள நூல் களில் இருக்கும் கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன

திருமறம், உமறுப்புலவர் உணர்த்திய பாலே என்னும் கட் டுரைகள் முறையே டெல்லித் தமிழ்ச்சங்கத் திரு. வி. க. மலரி அலும், திருநெல்வேலி உமறுப்புலவர் கினேவு மலரிலும், குறள் கரும் இன்பம் என்பது புதுக்கல்லூரி ஆண்டு மலரிலும், ஒத்த கருத்துடைய ஒப்பிலாச் சான்ருேர், தமிழக விழாக்கள். திருப் பாட்டின் திறன் என்பன குமர் குருபரன் என்னும் திங்கள் தாளிலும் வெளிவந்தவை

கபிலர், தூது, கிறித்தவர் தமிழ்த்தொண்டு, செல்வத்தின் சிறப்பு, காவற்பெண்டு, அழகைத் துறந்த அணங்கு என்பன முறையே. என்னுடைய சங்கச்சான்ருேர், தூது சென்ற துயர், தமிழ்நூல் வரலாறு, பணத்தின் மாண்பு, தொழிலும் புலமை யும், வையம் போற்றும் வனிதையர் என்னும் பெயரிய நூலி னின்று எடுக்கப்பட்டவை.

இக்கட்டுரைகளேப் படிக்கும்போது, படிப்பவர்கள் இலக் கியச் சுவையினையும் இனிதின் நுகர்தல் பொருட்டும் எழுதிய கருத்துக்களே உறுதிப்படுத்த வேண்டியும் பல செய்யுட்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இதனால் மூல இலக்கியங் களேப் படிக்கவேண்டும் என்னும் அவா படிக்கின்றவர்கட்கு எழும் என்பது எனது கருத்து.

இன்னேரன்ன முறையில் வெளிவரும் இக்கட்டுரைக் கொக்கினைத் தமிழ் உலகம் ஏற்று, என்னே இத்துறையில் மேல்மேலும் ஊக்கி ஆக்கம் அளிக்குமாறு வேண்டிக்கொள் கின்றேன்.

'அம்மை அப்பர் அகம்'

43, விஜயவிக்னேஸ்வரர் } 鑫 崛》 * 鳃

விேல் தெரு, ; பாலூர் கண்ணப்ப முதலியார்.

குளே, சென்னை-7.