பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக விழாக்கள் 39

போங்தார். இதல்ை நம் காட்டில் தேவர்கட்கு விழா நடைபெற்று வந்தது தேற்றமாம்.

புறநானூற்றில் விழாக்கள் இடையருது கொண் டாடப்பட்டன என்று குறிப்பிடப்பட்ட செய்திகள் பல உள. மடியா விழவின் யாணர் கன்னடு என்கிறது அங் நூல். மடியா என்னும் சொல்லுக்குப் பொருள் விளக்கிய அங் நூல் உரையாசிரியர் நீங்காத" என்றே உரை கூறிப் போக்தார்.

'இறையனர் அகப்பொருள் என்னும் நூல் உரையி லும் விழாக்கள் நடைபெற்றுவந்தன என்று குறிப்பிடும் குறிப்பு உண்டு. அந்நூல் பானே சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்னும் பழமொழிக்கு ஏற்பப் பல விழாக் களேயும் கூருது, சில விழாக்களே மட்டும் குறிப் பிட்டுப் பேசுகின்றது. "ஆவணி அவிட்டமே, உறை யூர்ப் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே' என்பன அந்நூல் குறித்துக் காட்டும் விழாக்க ளாகும்.

தண்டமிழ் மரபில் அமைங்த அகப்பொருள் துறை யில் ஊர் துஞ்சாமை என்னும் துறை ஒன்று உளது. அத்துறையின் பொருள் ஊரார் உறங்காமல் விழித்துக் கொண்டிருத்தல் என்பதாம். ஊரார் உறங்காமல் விழித்திருக்கின்றமைக்குக் காரணம் யாது? அவ்வவ் வூரில் விழாக்கள் குதூகலமாகக் கொண்டாடப்பட்ட மையில்ை, அக்களிப்பில் ஆழ்ந்தும், விழாவினைக் கண்டு மகிழ்ந்து வந்ததுமே ஆகும். இதனைச் சீர்காழிக் கோவை, 4.