பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கட்டுரைக் கொத்து

கொணர்ந்து சேரியில் வாழ்வார் என்பதை கூர்தருவேல் வல்லார் கொற்றம்கொள் சேரி என்ற அடி நமக்கு அறிவிக்கிறது. ஈண்டு வேல் என்பது வெட்டும் கரு வியே ஆகும். குத்தும் கருவியாகக் கொள்ளினும் கொள்க. இன்றும் காட்டுப்புறங்களில் நீர் நிலைகளில் உள்ள மீன்களே வலைகொண்டு பிடிப்பதோடு இன்றி, இருப்புத் தகடுகளைக்கொண்டு வெட்டி வீழ்த்திப் பிடித்து வருதலைக் கண்கூடாகக் காணலாம். மயிலேக் கானல் சோலைக்கே இருப்பிடம் என்பதற்கு இல்லே. மடல் ஆர்ர்ந்த தென்னமரச் சோலேகளுக்கும் இருப் பிடமாகும். காணலேயாயினும் கவினுறு தென்னங் காவேயாயினும் ஆண்டெல்லாம் மேகம் தவழ்ந்தே காணப்படும். இதுகுறித்தே ஆசிரியர் கார்தரு சோலே’ என்ருர். மரமும் செடியும் புதரும் கிறைந்து இருளாக இருந்தமையின் கருஞ்சோலே என்றும் அச்சோலே அவ ரால் சிறப்பிக்கப்பட்டது. அச்சோலே மணமிக்க மலர் களேயும் கொண்டமையால் கான்அமர் சோலேயும் ஆயிற்று. இத்தகைய இயற்கை வளனுக்கு இடையே கபாலீச்சுரம் அமைந்திருத்தலின் இதனைக் கார்தரு சோலேக் கபாலீச்சுரம் என்றும், கருஞ்சோலை சூழ்ந்த கபாலிச்சுரம் என்றும், கானமர் சோலைக் கபாலீச்சுரம்' என்றும் போற்றுவார் ஆயினர்.

மயிலேயைப்பற்றித் திருஞானசம்பந்தருக்கு நல்ல மதிப்பு இருந்திருக்கிறது. இதனே அவர் 'மாமயிலே' என்றும், உயர் மயிலே' என்றும், கண் ஆர் மயிலே' (இடம் அகன்ற) என்றும் கூறுவாராயினர்.

இத்தகைய சிறப்பு மயிலக்கு இருப்பதால்தான் போலும் இவ்விடத்தை விருப்பம் கொண்டு இறைவன்