பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தி ரு ம ற ம்

ஈடும் எடுப்பும் அற்ற நந்தம் இன்றமிழ் சிறந்து விளங்குதற்குப் பற்பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, இஃது ஒப்புயர்வற்ற பொருள் இலக்கணம் என்ற ஒர் அமைப்பினைப் பெற்று இலங்குவதாகும். இதனை உட்கொண்டே பரஞ்சோதியார் “இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடப்படக் கிடங்ததா எண்ணவும் படுமோ” என அறைகூவி அறிவிப்பார் ஆயினர்.

இத்தகைய பொருள் இலக்கணம், அகப்பொருள், புறப்பொருள் என இருபாலாகி இயங்கும். ஒவ்வொரு பகுதியிலும் பல துறைகள் உள. மறம் என்னும் துறை புறப்பொருளேச் சார்ந்ததாகும். இம்மறத்துறை பல வகையாகக் கூறப்பெறும். அவை எருமைமறம், தானே மறம், தேர்மறம், யானேமறம், குதிரைமறம் என்பன. எருமைமறம் இன்னது என்று இலக்கணம் வகுக்க வந்த இடத்தில் புறப்பொருள் வெண்பாமாலை,

வெயர்பொடி ப்பச் சினம்கடைஇப் பெயர் படைக்குப் பின்னின்றன்று என்று கூறி, விளக்கும் கிலேயில்

“கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி

நெடுங்கைப் பிணத்திடை கின்ருன்-நடுங்கமருள்

ஆள் வெள்ளம் போகவும் போகாள்கை வேலூன்றி வாள் வெள்ளம் தன்மேல் வர'