பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக விழாக்கள் 45

வீற்றிருத்தற்குரிய இடங்களில் ஒன்ருகக் கருதினன் என்க. இதனே இப்பதிகம் மயிலே இட்டம் கொண் டான்' என்று குறிப்பிடுவது காண்க. எனவே, இது காறும் கூறிவந்த காரணங்களால் மயிலேயின் வளம் இன்னது என்பதைக் கண்டோம்.

மயிலே வளமுடையதாகமட்டும் இருந்தது என்பது கூறுதற்கு இல்லே. அவ்வளத்தைப் பயன்படுத்தும் முறையிலும் அமைந்திருந்தது அம்மயிலே என்பதை யும் மாண்பையும் ஆண்டு நிகழும் செயல்முறைகளைக் கொண்டு நமக்கு விளக்குவாராயினர் பாலரு வாயினர்.

ஆண்டு வாழ்மக்கள் அடியார்களுக்கு அன்ன மிட்டுக் களிப்புற்றனர் என்பதை உருத்திர பல்கணத் தார்க்கு அட்டு இட்டு வந்தனர் என்றும், அருந்தவர் கள் உண்டு களிக்கும் வகையில் உணவு அளித்தனர் என்றும் அறிவிக்கும் தொடர்களாகிய உருத்திர பல்கணத்தார்க்கு அட்டு இட்டல்' என்ற அடியினேக் கொண்டும் அருங்தவர்கள் துய்ப்பனவும் என்ற அடி யினைப் படித்தும் அறிந்துகொள்ளலாம். அங்ஙனம் உணவு கொண்டவர்கள் இறைவனேடு ஒன்றிக் கலந்த கலப்புடையவர்களாய், பண்புடையவர்களாய், அருமை யான தவமும் உடையவர்களாய் இருந்தனர் என்பதை நாம் ஈண்டே அறிய ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தர் என்ற தலுைம், அருந்தவர்கள்’ என்றத லுைம் தெளியவைத்தனர் தோணிபுரத் தோன்றலார்.

இத்தகைய பண்புடையவர்கட்கு இடப்பட்ட உணவு நல்ல நறுநெய்யோடு கூடிய நல்ல உணவு என் பதை "கெய்ப்பூசும் ஒண்புழுக்கல்’ என்ற தொடரே