பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக விழாக்கள் 47

அப்பெருமானர் தமது திருமயிலைப் பதிகத்தில் குறிப்பிடும் திருவிழாக்கள் ஒன விழா, விளக்கீடு, ஆதிரைநாள், தைப்பூசம், கடல் ஆட்டு. உத்திர நாள், அஷ்டமி நாள், பொன் தாப்பு, பெருஞ்சாங்தி என்பன.

திருவோண விழா என்பது ஐப்பசித் திங்களில் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது என்பது ஐப்பசி ஒன விழா என்று கூறப்பட்டிருப் பது கொண்டு உணரலாம். விளக்கீடு என்னும் திரு விழா கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத் தில் கொண்டாடப்பட்டது என்பதை 'கார்த்திகை நாள் விளக்கீடு என்னும் தொடரைக்கொண்டு உணர லாம். விளக்கீடு என்பது வரிசையாக விளக்கை ஏற்றி வழிபடும் திருவிழா. இதுவே இக்காலத்தில் கார்த் திகைத் தீபம்' என்று வழங்கி வருகின்றது. விழாக்கள் ஆண் பெண் என்னும் இருபாலார்க்கும் பொதுவே ஆயினும், சிற்சில விழாக்கள் பெண்களுக்கே உரித்தாகி அவர்களாலேயே சிறப்புறக் கொண்டாடப்பட்டு வரு, வதையும் ஈண்டே கினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். அத்தகைய முறையில் பெண்களுக்கு உரிய கிலேயில் கார்த்திகை விளக்கீட்டு விழாவும் ஒன்ருகும். இதனேக் காழிப்பிள்ளேயார் கவினுற "தையலார் கொண்டாடும் விளக்கீடு என்று கண்ணியமாய்க் கூறியுள்ளார். இவ் விழா சங்க நூல்களிலும் பல இடங்களிலும் கூறப் பட்டுள்ளது. இதனே, கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி' என்றும், (அஞ்சுடர் நெடுங் கொடி - கார்த்திகை விளக்கீடு).