பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கட்டுரைக் கொத்து

'அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள் மறுகுவிளக் குறுத்து மாலை தாக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர'

என்றும் அகநானூறு கூறுகிறது.

திருவாதிரைத் திருவிழா மார்கழி மாதத்தில் திரு வாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. பதி கத்தில் மார்கழி மாதத்தில் இது கொண்டாடப்பட்டது என்பதற்குரிய சொல் இல்லையாயினும், கார்த்திகை மாத விழாவுக்குப் பிறகு இந்த விழாவின்னக் குறிப்பிடப் பட்டிருப்பதாலும், அடுத்த பாடலில் தைப்பூசம் எனக் குறிப்பிட்டிருப்பதாலும் இது மார்கழி மாதத் திருவிழா என்பது பெறப்படுகிறது. மார்கழி நீராடேலோர் எம் பாவாய்' என்பது திருவாசகம். இந்த விழாவும் பெண்க ளால் பெரிதும் கொண்டாடப்பட்டது என்பதே தேற்றம். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னுளால் நீராடப் போதுவீர்' என்று பூரீ ஆண்டாள் பெண்களே நோக்கிப் பாடி இருப்பதாலும் அறியலாம் இந்த விழாவைப் பற்றிய குறிப்புக்களும் சங்கநூலில் உண்டு. ‘மாயிரு திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூல் அந்தனர் விழவு தொடங்க’ என்று பரிபாடல் பகர்கிறது. பூச விழா தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் கொண் டாடப்படுதலே 'தைப்பூசம் என்றே இஃது இக்நாளிலும் குறிக்கப்பட்டு வருதலாலும், பதிகத்திலும் இத் தொடரே அமைந்திருப்பதாலும் தெரிந்துகொள்ளலாம். இங்காளில் நல்ல கறுகெய் கலந்து வெண்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுவது என்பதை, நெய்ப்பூசும் ஒண் புழுக்கல்' என்ற தொடர் கொண்டு உணரலாம்.