பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக விழாக்கள் 51

இறுதியாகச் சண்பையர்கோன் குறிப்பிட்டிருக் கும் திருவிழா சாந்தி விழா என்பது. இதுவே பவித்தி ரோற்சவம் எனவும் பகரப்படும். இதுகாறும் ஆண்ட வன், திருவிழாக்களில் ஈடுபட்டு இருந்தமையின், அவ னேச் சாக்தமாக ஆலயத்தில் அமர்த்திச் சாங்தி (அமைதி) கிலேயில் கொண்டாடுவது குறித்து இஃது இப்பெயர் பெற்றது. ஆண்டவனுக்கு நமக்குள்ளதுபோன்றசிரமம் எதுவும் இல்லே ஆதலின் சாந்தி தேவை இல்லே என்ரு லும், நமது விழைவே விழாவாதலின் இம்முறையில் எண்ணிச் சாங்தி விழாக் கொண்டாடினர். இவ்விழா ஒருநாள், பத்து நாள் விழாவாக இன்றித் தொடர்ந்து பன்ட்ைகள் வரையில் கொண்டாடப்பட்டமையின், இதனைப் பெருஞ்சாங்தி என்றே அடைகொடுத்துப் பேசினர்.

எத்துணை விழாக்களைக் கொண்டாடினுலும், அவ் விழாக்களில் வரும் அடியவர்கட்கு உண்டி கொடுத்து உபசரிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தவே சிரபுரச் செம்மலார், மயிலேப் பதிகத்தில் எடுத்த பாட்டிலேயே இந்தக் குறிப்பைக் குறிப்பிடுவாராயினர். இங்தக் குறிப்புத் தம் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து இருக்கும் காரணத்தினுல்தான் அப்பாட்டில் எங்தவிதமான திரு விழாக்களேயும் குறிப்பிட்டுக் காட்டாது அடியார் களுக்கு அமுது செய்தலேயே அறிவித்துப் போக்தார்.

இதுவரை கூறிவந்த கருத்துக்கள், தமிழகத்தில் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தன என்ப தும், திருமயிலையில் திருவிழாக்கள் திங்கள் தோறும் கொண்டாடப்பட்டு வங்தன என்பதும், அவ்விழாக் காலங்களில் அடியவர்களுக்கு அமுது படைக்கப்பட்டு வங்ததும் என்பதும் ஆகும். IS6°2.ඊ ه--سـیبی جمہ-ساجبعیمیہ--سمیہ