பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் தரும் இன்பம் é ;

பல காரணங்களாலோ, சில நாட்கள் தன் உள்ளத் திற்கு இயைந்த தலைமகளைத் தணந்திருக்க நேரிடு கிறது. அதுசமயம், தன் பிரிவினை மெல்ல தன் தலே விக்குக் கூறுகிருன். இவ்வாறு தன் கணவன் பிரி வினைக் கேட்ட தலைவி, அதுபோது எம்முறையில் தனது கருத்தைத் தன் காதலனுக்கு அறிவித்து அவன் போக்கைத் தடுக்க முயன்ருள் என்பதைத் திருவள்ளு வர் கூறும் முறையினைக் காண்க.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுகின் வல்வரவு வாழ்வார்க்கு உரை

என்பது தலைவியின் விட்ை.

இதன் கருத்து யாது ? 'அன்ப, நீ என்னிடம் என்னைவிட்டுப் பிரிவதில்லே என்று கூறுவதாயின் கூறுக; சின்னட் பிரிங்து மீண்டும் வருவன் என்று கூறும் மொழிகளே நீ வரும் வரை உயிருடன் வாழ்பவர் உள ராயின் அவர்களிடம் உரைக்க" என்பதன்ருே ? இதன் உள் பொருள் என்னே ? நீ என்கினத் தணங்தால் உயி ருடன் வாழேன்' என்பதன்ருே ? இவ்வாறு கூறுவதன் மூலம், தான் சிறிதும் காதலரைப் பிரிந்திருக்க இயலாது என்ற இன்பப் பிணிப்பை எத்துணை நாகரிகமாகத் தலைவி கூறியுள்ளாள் பாருங்கள் ஈண்டுத் தலைவி கூறியதாகக் கூறிய குறட்பா அன்ருே, சைவ எல்லப்ப நாவலரைத் தாம் பாடிய அருணேக் கலம்பகத்தில்,

‘ஆரும் விரும்பிய கல்விமேல் ஆசை

உமக்குள தாயிடின்

பாருற என்பொரு பாவையால் பாடிய

பாவவர் போலவே