பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கட்டுரைக் கொத்து

ருேம் அருந்தமிழ் செப்பிடும் நீர்மை

அறிந்திவண் ஏ குவீர்

மேரு நெடுஞ்சிலை அத்தனர் வீறரு

ளுபுரி வெற்பரே"

என்று அருமையாகப் பாடியமைக்கச் செய்தது ? இங்குக் குறிப்பிட்ட இப்பாடல், முன்னர்க் காட்டிய குறட்பாவின் பொருளை நல்ல எடுத்துக்காட்டுடன் விளக்கிக் காட்டும் முறையில் அமைந்துள்ளது. அதாவது, 'அன்பரே, நீர் யாரும் விரும்பிய கல்வி காரண மாக என்னேப் பிரிங்தேபோய் மீளவேண்டுமானல், நான் கூறும் கல்வியினையும் கற்று வருதல் வேண்டும். அதாவது, திருஞானசம்பந்தர் இறந்து எலும்பும் சாம்பருமாகக் கிடந்த மாதினத் தம் அருட்கல்வியின் துணையால் ‘பூம்பாவைப் பாட்டு என்னும் பதிகத்தைப் பாடி உயிர்பெற்றெழச் செய்தார். அதுபோல உம் பிரிவால் யான் இறந்து, சாம்பரும் என்புமாக இருக்கை யில், நீர் அருட்கல்வி கற்றிருந்தால் என்னேயும் உயிருடன் எழுப்பலாம் அன்ருே ? ஆகவே, அதனேயும் கற்று வருக என்பதாம். இத்தகைய உண்மை அன்பு மிக்க காதலியைப்பிரிய எவர்க்கேனும் மனம் வருமோ?

இத்தகைப் பண்புடைய மாதர் திலகங்கள் மணங் து கொண்ட ஒரு பிறப்பில் மட்டும் தம் கணவன்மார் களைப் பிரிந்திருக்க உளம் கொள்ளார் என்று நாம் எண்ணிவிடுதல் கூடாது. அங்ங்ணம் எண்ணப் பெரு காவலர் பெருமானும் இடங்கொடுத்திலர். தம் உள்ளம் உவக்கும் முறையில் மணங்த காதலரைப் பிறவிகள் தோறும் பிரிந்திருக்க எண்ணுது சேர்ந்தே வாழ எண்ண முடையர் ஏக்திழைமார் என்பது வள்ளுவர் கருத்து,