பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் தரும் இன்பம் 55

இதனே எத்துணை நயம்பட நாயனர் கவில்கின்ருர் பாருங்கள் !

அன்புற்ற இரு தம்பதிகள் இன்பமாகத் தனித்து உரையாடிக்கொண்டிருந்தனர். இவ்வின்பப் பொழுது போக்கில், தலைவன் கண்ணே ! உன்னே யான் சிறிதும் இப்பிறப்பில் பிரியேன்” என்றனன். இப்படித் தன் காதலன் கூறினல், காதலி என்செய்தல் வேண்டும்? தன் மகிழ்கனைப் பாராட்டி மிகுதியும் மகிழ்ந்திருக்க வேண்டும் அன்ருே ? ஆளுல், தலேவி ஆனந்தத்திற்குப் பதிலாக அழுகையினே மேற்கொண்டனள். இந்தக் காட்சியினையே வள்ளுவர்,

'இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனுக்

கண்நிறை நீர்கொண் டனள்'

என்று கூறினர்,

என் தலைவி ஈண்டு ஆனந்தமுருது, அழுது துன்புற் றனள் ? அழுகைதான் அவளது உண்மை அன்பை நமக்கு உணர்த்தி நிற்கிறது. அக்தோ ! இப்பிறப்பில் நம்மைப் பிரியேன்” என்ற தல்ை மறுபிறப்பில் நம்மைப் பிரிந்து விடுவார் போலும் ' என்று அவள் எண்ணிய எண்ணமே அவளை அழச் செய்தது என்க.

அன்பு மிக்க அருமைக் காதலர்கள் தமக்குள் உரை யாடும்போது, மிகுந்த விழிப்புடன் உரையாடவேண்டும் என்றும் வள்ளுவர் தம் இன்பக் குறள் மூலம் எடுத்துக் காட்டுகிருர், இங்ங்ணம் விழிப்புடன் பேசிற்றிலர் எனில், காதலர்கட்கு இடையே ஊடல் ஏற்படும் என் பது உய்த்துணரப்படுகிறது. இதற்குரிய எடுத்துக் ஆாட்டை ஈண்டே காணலாம்.