பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கட்டுரைக் கொத்து

பிரிவு காரணமாகப் பிரிந்து சென்ற காதலன் தனது அலுவல்களைத் தடையற முடித்துத் திரும்பி இல்லம் வந்துற்றனன். இல்லாளுடன் இன்பமாக உரையாடிக் கொண்டிருந்தனன். அந்தச் சமயம் தான் தணங்திருந்தபோதும் தன் காதலியை மறந்திலன் என் பதை உணர்த்த கண்மணி, நின்னே யான் உள்ளினேன்’ என்றனன். இதில் என்ன தவறு உள்ளது ? ஆளுல், தலைவி, தன் தலைவன் கின்னே யான் உள்ளினேன்" என்று கூறியதைத் தவருகப் பொருள் கொண்டுவிட் டனள். அதாவது, என்னே மறந்து இருந்து, பின்னர் கினேவு வந்தபோது கினைத்தீர் போலும் ' என்பதாகப் பொருள் கொண்டு, அவனை விட்டுச் சிறிது விலகி ஊடலும் கொண்டனள். இதனேயே,

'உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்று

புல்லாள் புலத்தக் கனள்' (என்னைப்

என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

ஆம்: உண்மைக் காதலி னடித்தான் தீர்வாள். தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் தலைவி அவனைத் தன் உள்ளக் கோயிலில் அமைத்து இடைவிடாது கினேங்தவண்ணமாக இருக்கிருள். அவன் உள்ளத்தில் இருந்தாலும், உடன் இருந்து கூடிக் குலவாத காரணத் தால் துன்பம் ஏற்பட்டு உடல் மெலிவைக் காட்டும் அன்ருே ? இதனே உணர்ந்த தோழி தலைவியின் உடற் சோர்வைப் போக்க, தலேவி ! இப்படி வருத்தம் மேற் கொண்டு உடற்சோர்வு படுதல் கூடாது. இதோ சூடாகப் பால் கொணர்ந்துள்ளேன். பருகிச் சோகம் தவிர்க' என்று கூறும்போது, தலேவி கூறிய கூற்ருக