பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் தரும் இன்பம் 59

கொண்டிலன் என்று கூறிச் சமாதானப்படுத்திய கிலே யில் மீண்டும் அவனுக்குத் தும்மல் வரத் தொடங்கியது. 'தும்மினல் மீண்டும் தலைவி பிணக்கம்கொள்ளக்கூடுமே. மீண்டும் சமாதானம் கூறவேண்டுமே என்று எண்ணிய தலைமகன் வந்த தும்மலை எப்படியோ வர ஒட்டாமல் தடுத்துவிட்டனன். அப்படித் தடுத்தபோதும் தலே மகள் அவனே விட்டிலள். ஒகோ உமக்கு வந்த தும்மலைத் தும்முதல் செய்யாமல், எனக்கு உம் நடத்தை உறுதிப்படாதிருக்கவேண்டும் என்பதற்காக அடக்கிவிட்டீர் போலும்! ஏன் உள்ளதை மறைக் கின்றீர்?" என்று கூறி அழுதாள் என்பதை,

'தும்முச் செறுப்ப அழுதாள் நூமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று' என்ற குறள் அறிவித்து நிற்கிறது.

இங்ங்ணம் எடுத்தவற்றிற்கெல்லாம் நம் தமிழ் நாட்டு மாதர் திலகங்கள் பிணக்கங் கொண்டதாக வள்ளுவனர் எடுத்துக் காட்டுகின்ருர் எனில், அதன் உள்ளுறைப் பொருள் யாது என்பதைச் சிறிது ஆழ அழுந்தச் சிந்தித்தால், நம் நாட்டு மாதர், தம் கற்பினே மட்டும் காத்துக்கொள்ள விரும்பாமல் தம் கணவன் மார் ஒழுக்கமும் கெடாது இருக்கக் கவனித்து வந்துள் ளார் என்ற உண்மையும் உணரக் கிடைக்கின்றது. இதல்ை, இம்மாதர்கள் தம் கணவன்மாரிடத்தில் உண்மை அன்புகொண்டிருந்த நிலைமையும் புலனுகிறது அன்ருே ?

இதனை மேலும் ஓர் உதாரணத்தால் கூறி இக்கட் டுரையினே முடிப்போமாக. அன்புமிக்க காதலர்கள்