பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. திருப்பாட்டின் திறன்

திருவளர்ந்தோங்கும் இப்பரதகண்டத்தே திகழும் செங்தமிழ் நாட்டில் உலகம் உய்யத் தோன்றியருளிய மூவர் முதலிகளான அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் மொழிந்த மொழிகள் தேவாரம் என்னும் பெயரால் வழங்கப்பெற் றும் போற்றப்பெற்றும் வருவதைப் பொதுவாகத் தமிழகமும், சிறப்பாகச் சைவ உலகமும் அறிந்ததோர் உண்மையாகும். ஆல்ை, மூவர் பாடல்களும் தேவாரம் என்று வழங்கப்பட்ட முறையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டிருக்கிறது என்பது சிற்சில காரணங்களால் நாம் சிந்திக்கவேண்டியவர்களாய் இருக்கின்ருேம்.

திருநாவுக்கரசர் திருவாய்மலர்ந்தருளிய அருள் மொழி ஒன்றே தேவாரம் என்றும், திருஞானசம்பந்த ரது திருவாக்குத் திருக்கடைக்காப்பு என்றும், சுங்தர மூர்த்திகளின் சொல் ஒவியங்கள் திருப்பாட்டு என்றும் வழங்கப்பெற்றனவாக எண்ண இடம் இருக்கிறது. இக்கருத்தினத் திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள் பாடிய நூற்களுக்கு உரை வகுத்த திருப்போரூர் சிதம்பர சுவாமிகளின் வாக்கினின்றும் நன்கு உணர லாம். வேண்டுவோர் அவிரோத உந்தியார், பதினேழா வது பாட்டின் உரையால் தெளிக. அருட்பிரகாச வள்ளலாராகிய இராமலிங்க சுவாமிகட்கும் இக்கருத்து உடன்பாடு என்பது, அவர் சுந்தரரைப் போற்றிப் பாடிய பாடல்களில் ஒன்றில் தேன் படிக்கும் அமு தாம் உன் திருப்பாட்டை' என்று குறிப்பிட்டுள்ளார்.