பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாட்டின் திறன் 65

சான்று இவர் பாடியுள்ள திருகாட்டுத் தொகைப் பதிகம் ஒன்றே சாலும். மிழலைப்பதி இப்பெயருடன் சிற்சில இடங்களில் இருப்பதால் இந்த காட்டு மிழலே என உணர்த்த, மிழலை நாட்டு மிழலை. வெண்ணி நாட்டு மிமுலே என்று வேறுபடுத்திச் சுட்டிய அறிவை என் னென்பது! இவ்வாறே அப்பதிகத்தில் சுட்டியுள்ள பல இடங்களேயும் அறிந்து இன்புறுக. ஆக, இவர் எத்துணை நுட்பமாக ஒவ்வொரு நாடு நகரங்களே அறிங் துள்ளார் என்பதை நாம் உணர்கின்ருேம். இவ்வாறே இவரது கல்விப் பரப்பின் ஆராய்ச்சிக்கு அரண் செய்யும் பதிகம் திருத்தொண்டத் தொகையாகும். அதில் பல காலத்தில் பல நாட்டில் பல தொண்டில் ஈடுபட்டவர்களைப்பற்றிய குறிப்புக்களைக் காண்கிருேம். அக்குறிப்புக்கள் இல்லையேல், நம்பியாண்டார் நம்பி கட்கோ சேக்கிழார் பெருமார்ைக்கோ அடியார் வர லாற்றை ஆணித்தரமாக அறிவிக்க இயலாமல் போய் இருக்கும். "அலேமலிந்த புனல் மங்கை ஆனயர் கட வூரில் கலயன் என்று இவ்விரு அடியார்களின் ஊர் இன்ன என்பதையும், இல்லேயே என்னத இயற்பகை வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருள்' என்னும் அடைகளால் இவ்வடியார்களின் உயிர் நிலை யான உண்மைத்தொண்டினேயும் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார் பாருங்கள் சம்பந்தர், திருநாவுக்கரசர் வரலாற்றை முற்றமுடிய அறிந்தவர் என்பது திருவீழி மிழலேப் பதிகத்தில் இருந்துநீர் தமிழோடி சைகேட்கும் இச்சையால் காசு கித்தல் நல்கினர் என்று குறிப் பிட்டிருப்பதில் இருந்து உணரலாம். திருநாவுக்கரசர் பதிகத்தினை இவர் முற்றும் படித்தவர் என்பதை

5