பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாட்டின் திறன் 67

அல்லவோ ? திருக்கானட்டுமுள்ளுர்ப் பதிகத்தில் 'இறையவனே மறையவனே எண்குணத்தினை'என்னும் தொடரும் எண்குணத்தான் தாள்' என்னும் திருக் குறள் தொடரேயாகும்.

சரித்திரப் புலமையும் இவர்க்குண்டு என்பதைக் கோயில் பதிகத்தில் ‘உரிமையால் பல்லவர்க்குத் திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் என்று அறிந்து கூறியதிலிருந்து அறியலாம். இத்தொடர் பல்லவர் ஆட்சி ஓங்கி இருந்த குறிப்பை விளக்குகின்றதன்ருே ?

சோதிட நூல் புலமைக்குத் திருவொற்றியூர்ப் பதிகத்தில் "மகத்தில் புக்கதோர் சனி' என்னும் தொடரே போதிய சான்ருகும். இத்தகைய கல்வி யறிவு பெற்றிருந்தமையால்தான் இறைவனேக் குறிக் கும்போது, கற்ற கல்வியினும் இனியான்’ என்று பாடியுள்ளார். இறைவர் சுங் த ர ரை த் தோழமை கொண்டதற்கு இவர்பால் அமைந்த கல்வி அறிவே காரணமாகும் என்பதனைச் சிவப்பிரகாச சுவாமிகள்,

அறிந்து செல்வம் உடையானம்

அளகைப் பதியாற் ருேழமைகொண் டுறழ்ந்த கல்வி உடையானும்

ஒருவன் வேண்டும் என இருந்து துறந்த முனிவர் தொழும்பரவை

துணைவ ! கினைத்தோ ழமைகொண்டான் சிறந்த அறிவு வடிவ மாய்த்

திகழும் நுதற் கண் பெருமானே !

என்று பாராட்டியுள்ளார்.