பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

← Ꭶ கட்டுரைக் கொத்து

இன்னேரன்ன கல்வி யறிவுடையார் பாடிய பாட்டுத் திறனுடைய பாட்டாகவும் நயனுடைய பாட் டாகவும் துலங்கவல்லது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ? மற்ருெரு புலவர் நயத்துக்குச் சுந்தர னர்' என்று இவர் பாடலின் நுட்பத்தை அறிந்து ஒதியுள்ளார்.

இனிச் சுங்தரர் பாட்டின் திறனைச் சிறிது உணர் வோமாக. சுங்தரரும் இறையவரும் ஒருவரை ஒருவர் தோழமைகொண்டு பழகியவர் ஆதலால், சுந்தரர்க்கு இறைவர்பால் எதையும் வேண்டும் திறன் அமைங் திருந்தது. திருநாகைக்காரோணப் பதிகத்தில் தமக்கு இன்னின்ன வேண்டுமெனப் பட்டியல் தயாரித்துக் கேட்போர்போல் கேட்குங் திறன், இவர் திருப்பாட்டின் திறன்களில் ஒன்ருகும்.

இக்கால நாகரிகமுறைக்கிணங்கக் குதிரை ஊர்தி வேண்டியதை,

“காற்றனேய கடும்பரிமா ஏறுவதும் வேண்டும்' என்றும்,

'கத்துாரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்' என்றும்,

பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்

கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும் என்றும் கேட்ட அடிகளைப் படிக்கையில் நாம் வியப் பெய்தாமல் இருக்கமுடியாது. இத்துணையும் வேண்டு தற்குத் தமக்கு உரிமை உண்டு என்பதைக் குறிப்பார் போல,