பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கட்டுரைக் கொத்து

கவர்ந்துவரப் பணித்தார். அவைகளும் அவ்வாறே செய்தன. அப்பொழுது சுங்தரர், நீர் இவ்வூரில் ஏன் குடியாக இருக்கின்றீர் ? ஆறலே கள்வர் மிகுதியும் உளரே. நீர் என்ன கால் அற்ற முடவரோ? அன்றி, உடல் நலம் குன்றிய நோயாளியோ? அல்லரே! உம் ஊர்தியாகிய இடபத்தின்மீதேனும் ஏறிப்போவீர்” என்று பாடிய வரிகளே,

‘முடவ ரல்லீர் இடரி லீர்முரு கன்பூண்டி மாநகர்வாய் இடவ மேறியும்போவ தாகில்ர்ே

எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானிரே' என்பன.

இதுபோலவே திருவொற்றியூரில் இழந்த கண் பார்வையில், ஒன்றைத் திருவேகம்பத்தில் பெற்றபின் திருவாரூருக்குச் சென்று மற்ருெரு கண்ணின் பார்வை யையும் வேண்டும்போது ஏசல் முறையில்,

'விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன்

விரும்பி ஆட்பட்டேன் குற்றம் ஒன்றும் செய்த தில்லை கொத்தை ஆக்கினர் ஏற்றுக் கடிகேள் ? என்கண் கொண்டீர்;

நீரே பழிபட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்

வாழ்ந்து போதிரே 1 என்று பாடினர். இதில், நான் விரும்பி ஆட்பட்டேன். நான் குற்றம் ஒன்றும் செய்யவில்லே . அப்படி இருந்தும் என் கண்ணேக் கொத்தையாக்கினர். அதல்ை உமக்குத்