பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கட்டுரைக் கொத்து

'கடி தாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்

குடிதான் அயலே இருந்தால் குற்ற மாமோ ?

கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர்

அடிகேள் ! உமக்கார் துணையாக இருந்தீரே !' இப்பாட்டில் வேதாரண்யக் கோடிக்கரையில் உள்ள இறைவரே, இக்கடல் ஒரத்தில் யாரும் துணையின்றி இருக்கின்றீரே கடல் காற்றும் வீசி உம்மைத் தொங் தரவுபடுத்துகிறதே, இதனே நீத்து ஊருக்குள் வந்து குடிபுகக்கூடாதோ ? என்று வினவும் வி ைஎத்துனே இரக்கமாக இருக்கிறது பாருங்கள்!

சீபர்ப்பத மலேயை வர்ணிக்கையில் வன்தொண்டர் வேடர்கள் இரக்கங்கொண்டு யானைகளுக்குத் தேனைப் பிழிந்து இனிது ஊட்டினர் என்னும் செயலே அழகு படப் பாடியிருப்பதும் இரக்கச்சுவைக்கு ஒர் எடுத்துக் காட்டாகும்.

‘ஆனைக்குலம் இரிங்தோடித்தன் பிடிசூழலில் திரியத்

தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கி மானக்குற அடல்வேடர்கள் இலேயால்கலை கோலித். தேனைப்பிழிந் தினிதுாட்டிடுஞ் சீபர்ப்பத மலேயே ' என்னும் பாடலைச் சுவைத்து இன்புறுக கொல்லு தலையே குணமாகக் கொண்டொழுகும் பொல்லாத சிலேவேடப் புளிஞர் இடத்தும் இரக்கத்தை இணைத் துப் பாடிய திறனே என்னென்று வியப்பது ?

இனி நகைச்சுவைத் திறனே எங்ங்னம் எடுத்து இயம்பியுள்ளார் என்பதையும் சிறிது காண்போமாக. எந்த இலக்கியத்திலும் நகைச்சுவையைப் பெய்து எழுதப்பெருதிருப்பின், அது சிறந்த நூ லா கப்