பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாட்டின் திறன் 75

போற்றப்படுவதில்லே. ஆகவே, புலவர் பெருமக்கள் தம் நூலில் யாண்டேனும் அதனைப் புகுத்தியே செல்வர். சில இடங்களில் அங்குகைச்சுவைப் பாடல்கள் தம் சுவையை வெளிப்படையாக வெளிப்படுத்தி கிற்கும்: சிற்சில இடங்களில் இலைமறை காய்போல் மறைந்து காணப்படும், இம்மறைவைத் துருவி க் காணுது பொறுமையை இழந்தவர்கள் தமிழ் நூல்களில் நகைச் சுவையே இல்லே என்றே கூற முற்பட்டு விடுகின்றனர்.

சுங்தரரது திருப்பாட்டின் திறத்தில் நகைச்சுவைக் குரிய பாடல்களில் ஒன்று,

"திங்கள் தங்கு சடைகண் மேலோர்

திரைகள் வந்து புரள வீசும் கங்கை யாளேல் வாய்தி றவாள்

கணப தியேல் வயிறுதாரி அங்கை வேலோன் குமரன் பிள்ளை

தேவி யார்கோல் தட்டி யாளார் உங்களுக்காட் செய்ய மாட்டோம் ஒண காந்தன் தளியு ளிரே !

என்பது. இப்பாடல் இறைவரது குடும்பத்தையே எள்ளி கையாடுவதுபோலன்ருே இருக்கிறது? இன்னே ரன்ன சுவைத்திறன் அமைந்த பாடல்கள் பல சுங்தரர் பாட்டில் அ ைமங் து இருக்கின்றன. அவற்றைப் படித்து இன்புறுவீர்களாக.