பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது தி 77

இதனைத் தெள்ளத் தெளியப் பாரத வெண்பா,

'அன்புடமை ஆய்ந்த அறிவுடமை இல்பிறப்பு நன்குடமை நல்ல நயனுடமை-கன்கமைந்த சுற்றம் உடமை வடிவுடமை சொல்வன்மை கற்றடங்கல் தாதின் கடன்" என்று கூறுவதையும் காண்க. அன்பும் அறிவும் ஆராய்ந்த சொல்வன்மையும் ஆகிய இம் முப்பண்பு களும் மிகமிக இன்றியமையாதவை. ஆராய்ந்த சொல் வன்மை என்றதல்ை தூதுவர் நல்ல கல்விப்பயிற்சிபெற் றவராய் இருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகிறது அன்ருே து துவர் எல்லா நூல்களேயும் கற்று வல்லார்முன் அந்நூல்களேத் தாமும் கற்று வல்லவ ராய்த் திகழ்தல் இன்றியமையாதது. நூலே கன்கு ஒதியவர்களைக் காட்டிலும், அந்நூல்களை ஓதி உணர்க் தவர் முன்னர் நூலின் திறனே வகுத்துக் கூறும் ஆற்றல் தாதுவர்க்குப் பெரிதும் வேண் டற்பாலதாகும்.

செய்திகளைப் பிறர்மாட்டுக் கூறுங்காலத்துத் தொகுத்துச் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லவேண்டும். அதனைச் சொல்லும்காலத்து, இனிய சொற்களால் எதிரி மனம் மகிழும்படியும் சொல்ல வேண்டும். இதல்ை சுருங்கச் சொல்லவேண்டும் என்ப தும், விரும்பாத சொற்களே நீக்கவேண்டும் என்பதும், மகிழுமாறு பேசவேண்டும் என்பதும் விளங்குகின்றன அல்லவா ?

தூதராகச் சென்றவர், தம்மைத் துாது போக்கிய வர் கூறியவற்றை எதிரியிடத்தில் கூறும்போது, அவ் வெதிரி கோபங்கொண்டு தம்மைக்கொல்வான்போன்று சிற்றக் குறியுடன் பார்க்கவும் நேரிடும். அங்தக்காலத்தி அலும் சிறிதும் அஞ்சுதல் கூடாது. காலத்தை அறிந்து