பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உமறுப்புலவர் உணர்த்திய பாலை

முஸ்லிம் புலவர்களுள் தலைசிறந்தவர் உமறுப் புலவர். இவரது பெருமையினைத் தமிழ்நாடு இவர் யாத் துள்ள சீருப் புராணத்தின் மூலம் நன்கு அறியும். இவர் புலவர் பெருமக்களால் நன்கு பாராட்டப்பட்டவர். இவரைக் காயற்பட்டினம் பீர்முகம்மது அவர்களின் குமாரர் மகுதாமுகம்மதுப் புலவர் தாம் யாத்த கீர்த்தகு ரஞ்சிதம் என்னும் நூலில்,

செந்தமி ழாலே சீரு சிறப்புடன் பனுவல் செய்தே உந்திய புகழ்பெற் ருேங்கும் உமறெனும் புலவோர்

என்று வாயாரப் புகழ்கின்ருர். சீதக்காதிமீது பாடப் பட்ட கொண்டி நாடகத்தில் உமறுப்புலவர்,

சந்த முத்தமிழ் தேறும்-கல்வித் தலைவர் மகிழ் உமறுப் புலவர்

என்று பாராட்டப்படுகிருர் !

இத்தகைய சீரும் சிறப்பும் பேரும் புகழும் வாய்ந்த புலவராம் உமறு அவர்கள் பாலே கிலத்தினை எங்ங்னம் பாங்குற உணர்த்தி உள்ளனர் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அவ்வாராய்ச்சிக்கு முன்பு பாலேகிலத்தின் பொதுப்பண்புகளைப்பற்றி நம் இலக்கண இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்ப தைப் பார்ப்போமாக.